பிரசாந்த்: தமிழ் சினிமாவின் போஸ்டர் பாய் அதிரடியாகத் திரும்பி வருகிறார்!

ஏப்ரல் 6, 1973 இல் பிறந்த பிரசாந்த், தமிழ் திரைப்பட துறையில் ஒரு நீங்காஇடத்தைப் பிடித்துள்ளார். இந்த நடிகர் நடித்திருக்கும் கதாபாத்திரங்கள் தமிழ்த் திரையுலகவரலாற்றில் முன்மாதிரியான வரலாற்றுப் பதிவுகளாக இடம்பெறும்.

நடிகர்கள் பிரசாந்த் அவரது கலைப்பயணத்தில் நடித்திருக்கும் அனைத்துகதாபாத்திரங்களும் புவியியல் மற்றும் மொழி எல்லைகளைக் கடந்துகோடிக்கணக்கானவர்களால்  நேசிக்கப்பட்டுரசிக்கபட்டுள்ளன.

ஜீன்ஸ், பெரும்தச்சன், மற்றும் வின்னர் , போன்ற திரைப்படங்களில் தமது மிகச்சிறந்த நடிப்பிற்காகப் புகழ்பெற்றஇவர், தமிழ் என்னும் திரைப்படத்தில்மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார், இது தமிழ் சினிமாவில் வெள்ளி திரையில்ஒரு நடிகரால் வழங்கப்பட்ட மிகச்சிறந்த நடிப்புகளில் ஒன்றாகும்.

பிரசாந்த் நல்ல நடிகர் மட்டுமல்ல, ஒரு நல்ல மனிதரும்கூட. அவர் அக்கறைகொண்டுள்ள விஷயங்களில் முழுமூச்சாக ஈடுபட்டுசெயல்படுவதில் பிரசித்தி பெற்றுள்ள இவர், அவற்றில் முழுஅர்பணிப்புடன் பங்கேற்கிறார். சமீபத்தில் இவர் கஜா புயலுக்கான நிவாரணப்பணிகளில் ஈடுபடுவதற்காக மக்களைஊக்குவித்தார்.

தந்தையான புகழ்பெற்ற நடிகர், தியாகராஜனின்அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதற்கு முன், பிரசாந்த் கம்பியூட்டர் கிராபிக்ஸ் மற்றும்மல்டிமீடியா படித்தார், பின்னர் லண்டனிலுள்ள டிரினிட்டி காலேஜ் ஆஃப் மியூசிக்கில் தனது இசைஆர்வத்தைத் தொடர்ந்தார்.

பிரசாந்த்தைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், முதலில் அவர் ஒரு டாக்டராக ஆக விரும்பினார், அவர் தனது கனவை நனவாக்க இரண்டு வெவ்வேறுமருத்துவ கல்லூரிகளில் சேர்ந்தார்.

இருப்பினும், பின்னர் அவர் ஒரு நடிகராக  மாற முடிவெடுத்தார், இல்லையென்றால், உலகம் இந்த அற்புதமான நடிகரின் சிறந்ததிரைப்படங்களைத் தவறவிட்டிருக்கும்.  

90-களில் இருந்து பொன்னான நடிப்பை வழங்கிவரும் பிரசாந்த் தொடர்ந்து வலுவான நிலையிலேயேஇருக்கிறார். தமிழ் சினிமாவின் போஸ்டர் பாயாக தனதுநீண்ட பயணத்தில், இவர் நடிப்பின்எல்லைகளை மாற்றியமைத்துள்ளார்.

அது அவரது சமீபத்திய படமாகிய, ஜானி, எந்தவித ஆச்சரியமும் இன்றி, இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும், மேலும் இத்திரைப்படம் ஏற்கனவே திரைப்படத்துறையில்சில தலைகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

சுவாரஸ்யமாக,  ஜானியின்ட்ரெயிலர் அது வெளியிடப்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள்ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று, தமிழ் திரைப்பட துறையில் மிகவும்பிரியமான நடிகர்களில் பிரசாந்தின் நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்தியது.

பிரசாந்த் ஒரு நடிகர் மட்டுமல்ல, அவர்  ஒரு பல்கலைக்கழகம், ஒழுக்கத்திலும் தனது ஒவ்வொரு புதிய கதாபாத்திரத்திலும் தொடர்ந்து தன்னையேமிஞ்சுவதிலும் ​​வளரும் நடிகர்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.

இவர் நம்மை மகிழ்விப்பதோடு மட்டுமல்லாமல், வாழ்க்கையில் நாம் தொடர விரும்பும் எந்தத் துறையிலும் எப்போதுமே சிறந்து விளங்கவும் நம்மை ஊக்குவிப்பார் என்று நம்புகிறோம்!  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *