Trusted By8 Crore+ Players*

ஜங்க்லீ ரம்மியில் இந்தியன் ரம்மி கேமை விளையாடவும்

Indian Rummy Game

ஜங்க்லீ ரம்மியில் இந்தியன் ரம்மி கேமை விளையாடவும்

  • அறிமுகம்
  • இந்தியன் ரம்மியின் பல்வேறு வேரியன்ட்கள்
  • இந்தியன் ரம்மி விக்கி
  • இந்தியன் ரம்மி விதிகள்
    • ஓரு சீக்வென்ஸ் என்றால் என்ன?
    • ஒரு செட் (set) என்றால் என்ன?
    • ஒரு ஜோக்கர் என்றால் என்ன?
  • இந்தியன் ரம்மியை விளையாடுவது எப்படி?
  • இந்தியன் ரம்மியில் வெற்றி பெறுவது எப்படி?
  • இந்தியன் ரம்மியில் பாயிண்டுகள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன?
  • ஜங்லீ ரம்மியில் இந்தியன் ரம்மி டோர்னமென்ட்கள்

ரம்மி, அல்லது கிளாசிக் ரம்மி கேம், என்பது எல்லா காலத்திலும் மிகவும் பிரபலமான கார்டு கேம்களில் ஒன்றாகும். பல ஆண்டுகளாக, இந்த விளையாட்டு உலகின் பல்வேறு பகுதிகளில் பரவி, பற்பல மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. இந்தியாவில், இது உள்ளூர் கார்டு விளையாட்டு ஆர்வலர்களால் மாற்றியமைக்கப்பட்டது, இது இந்தியன் ரம்மி எனப்படும் ஒரு அற்புதமான வேரியண்ட்டை உருவாக்கியது.

இது பப்லு, என்றும் அழைக்கப்படுகின்ற இந்த இந்தியன் ரம்மி கேம் விரைவில் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் பரவலாக பிரபலமடைந்தது. சமீபத்திய வருடங்களில், இந்த விளையாட்டின் ஆன்லைன் பதிப்பு வெளியிடப்பட்டது, இது மெய்நிகர் உலகில் விரைவாக பிரபலமடைந்தது. இப்போது இது நமது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது, தினமும் ஆன்லைனில் பல்லாயிரக் கணக்கான வீரர்கள் கேஷ் ரம்மி கேம்கள் மற்றும் டோர்னமெண்ட்டுகளில் ஈடுபடுகின்றனர்

இந்தியன் ரம்மியை ஆன்லைனில் விளையாடுவது என்பது அதன் கிளாசிக் பதிப்பு முறையில் விளையாடுவதைப் போன்றதாகும். இந்த ஆன்லைன் கேம் 13 கார்டுகளைப் பயன்படுத்தியும் விளையாடப்படுகிறது, மேலும் உங்கள் கார்டுகளை தேவையான பல்வேறு சேர்க்கைகளில் வரிசைப்படுத்தி சரியான வெற்றி அறிவிப்பை உருவாக்குவதே இந்த விளையாட்டின் நோக்கமாகும். நீங்கள் இந்த விளையாட்டிற்கு புதியவராக இருந்தால்,இந்தியன் ரம்மி விதிகளைப் பின்பற்றி,விளையாட்டை நன்றாகப் புரிந்து கொள்ள, இப்போதே பிராக்டீஸ் கேம்களை விளையாடத் தொடங்கலாம்.

இந்தியன் ரம்மியின் வெவ்வேறு வேரியண்ட்டுகள்

இந்தியன் ரம்மி என்பது ஒரு கவர்ச்சியான கார்டு கேம் ஆகும், அதில் நிறைய சலுகைகள் உள்ளன. இது மிகவும்-வேடிக்கையானது, பொழுதுபோக்கானது மற்றும் பல அற்புதமான வேரியண்ட்டுகளில் வருகிறது. இந்த விளையாட்டின் பின்வரும் வேரியண்ட்டுகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் விளையாடி மகிழலாம்:

பாயிண்ட்ஸ் ரம்மி: இது இந்தியன் ரம்மியில் இது ஒரு விரைவான விளையாட்டு வேரியண்ட் ஆகும். இது ஒரு ஒற்றை-ஒப்பந்த வேரியண்ட் ஆகும் மற்றும் ஒவ்வொரு புள்ளியும் கேஷ் கேம்களில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட பண மதிப்பைக் கொண்டுள்ளது.

டீல்ஸ் ரம்மி: இந்த வேரியண்ட் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான டீல்களில் விளையாடப்படுகிறது மற்றும் டீலின் வெற்றியாளர் பூஜ்ஜிய புள்ளிகளைப் பெறுவார்.

பூல் ரம்மி: இதுஇந்தியன் ரம்மி ஆன்லைன் கேமின் மிக நீண்ட வடிவமாகும், இது பொதுவாக பல டீல்களுக்கு நீடிக்கும். 101 புள்ளிகளை (101 பூலில்) அல்லது 201 புள்ளிகளை (201 பூலில்) அடையும் ஆட்டக்காரர்கள் நீக்கப்படுவார்கள் இறுதியில் டேபிளில் தனியாக நிலைத்திருக்கும் ஆட்டக்காரர் வெற்றியாளர் ஆவார்.

இந்தியன் ரம்மி அகராதி

டெட்வுட்: ஒரு வரிசையில் அல்லது தொகுப்பில் பயன்படுத்தப்படாத கார்டுகள் அல்லது குழு சேராத கார்டுகள் டெட்வுட் என்று அழைக்கப்படும்.

டிஸ்கார்ட்: இந்தியன் ரம்மியில், ஒவ்வொரு சுழற்சியின் பொழுதும், நீங்கள் ஒரு கார்டைத் தேர்ந்தெடுத்து, தேவையற்ற கார்டை விட்டுவிட வேண்டும். கார்டுகளை விட்டுவிடுவதை நிராகரித்தல் என்று அழைக்கப்படுகிறது.

டிராப்: உங்களுக்கு சாதகமற்ற கார்டுகள் கிடைத்தால், "டிராப்" விருப்பத்தைப் பயன்படுத்தி விளையாட்டிலிருந்து/சுற்றிலிருந்து வெளியேறலாம்.

அறிக்கை: தேவையான வரிசைகள் அல்லது வரிசைகள் மற்றும் தொகுப்புகளை நீங்கள் உருவாக்கியவுடன், 14வது கார்டை "பினிஷ் ஸ்லாட்டில்" வைத்து நிராகரிக்க வேண்டும், பின்னர் உங்கள் எதிர் ஆட்டக்காரர்கள் பார்க்கும் வகையில் உங்கள் கை/கார்டுகளை காண்பித்து உடனடியாக வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும். இது ஒரு வெற்றி அறிக்கை என்று அழைக்கப்படுகிறது.

மெல்ட்: வரிசைகளில் மற்றும் தொகுப்புகளில் கார்டுகளை தொகுத்து வரிசைப்படுத்துவது மெல்டிங் எனப்படும்.

இந்தியன் ரம்மி விதிகள்

இந்தியன் ரம்மியை இரண்டு முதல் ஆறு ஆட்டக்காரர்கள் விளையாடுகிறார்கள். ஆட்டக்காரர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, ஒன்று அல்லது இரண்டு வரையறுக்கப்பட்ட சீட்டுக்கட்டுகள், மேலும் ஒரு கட்டிற்கு 1 ஜோக்கர் பயன்படுத்தப்படுகின்றன.

விளையாட்டின் நோக்கம் உங்கள் 13 கார்டுகளையும் வரிசைகளில் அல்லது வரிசைகள் மற்றும் தொகுப்புகளில் ஒழுங்குபடுத்தி சேர்ப்பதாகும். செல்லுபடியாகும் வெற்றி அறிவிப்புக்கு, குறைந்தபட்சம் இரண்டு வரிசைகள் இருக்க வேண்டும், அவற்றில் குறைந்தபட்சம் ஒரு உண்மையான வரிசை இருக்க வேண்டும்.

வரிசை என்றால் என்ன?

இந்தியன் ரம்மி விதிகளின்படி, ஒரே குறியீட்டில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொடர்ச்சியான கார்டுகளின் குழு ஒரு வரிசை என்று அழைக்கப்படுகிறது. இரண்டு வகையான வரிசைகள் உள்ளன:

உண்மையான வரிசை

வரிசையில் உள்ள எந்த ஒரு கார்டுக்கு மாற்றாக ஜோக்கர் இடம் பெறாமல் இருந்தால், அது உண்மையான வரிசை என்று அழைக்கப்படுகிறது. ஒரு வைல்ட் ஜோக்கரை அதன் அசல் மதிப்பும், அதன் அசல் குறியீடும் கொண்ட கார்டாகாவும் உண்மையான வரிசையில் பயன்படுத்தலாம்.

உதாரணங்கள்: பின்வருபவை வைல்ட் ஜோக்கரை உள்ளடக்கிய உண்மையான வரிசைகள் ஆகும் Pure sequenes including wild joker 1

Pure sequenes including wild joker 2

உண்மையற்ற வரிசை

இல்லாமல் போன கார்டுக்கு மாற்றாக ஜோக்கரைக் கொண்ட வரிசையானது உண்மையற்ற வரிசை என்று அழைக்கப்படுகிறது.

உதாரணங்கள்: வைல்ட் ஜோக்கர் Impure sequenes including wild joker 1 மற்றும் அச்சிடப்பட்ட ஜோக்கர் கொண்ட உண்மையற்ற வரிசைகள் பின்வருமாறு:

Impure sequenes including wild joker 2

தொகுப்பு என்றால் என்ன?

இந்தியன் ரம்மி விதிகளின்படி, ஒரு தொகுப்பு என்பது ஒரே எண் மதிப்பில் உள்ள மூன்று அல்லது நான்கு கார்டுகளின் குழுவாகும், ஆனால் வெவ்வேறு குறியீடுகள் கொண்டவை. ஒரு தொகுப்பில் ஒரு ஜோக்கரை மாற்று கார்டாகப் பயன்படுத்தலாம்.

உதாரணம் 1. ஜோக்கர் இல்லாத தொகுப்புகள்

Set without Joker

உதாரணம் 2. ஜோக்கர் உள்ள தொகுப்புகள்

Set with Joker

ஜோக்கர் என்றால் என்ன?

இந்தியன் ரம்மி கேம்மில் ஜோக்கர் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஒரு வரிசையில் (உண்மையற்ற வரிசை) அல்லது ஒரு தொகுப்பில் இல்லாமல் போன எந்த கார்டுக்கு மாற்றாக இடம் பெறும். ரம்மியில் இரண்டு வகையான ஜோக்கர்கள் பயன்படுத்தப்படுகின்றன:

அச்சிடப்பட்ட ஜோக்கர்: பெயரில் குறிப்பிடப்பட்டது போல, அச்சிடப்பட்ட ஜோக்கரில் ஒரு ஜோக்கரின் படம் அச்சிடப்பட்டிருக்கும்.

வைல்ட் ஜோக்கர்: விளையாட்டின் தொடக்கத்தில், குறிப்பில்லாமல் எடுக்கப்பட்ட ஒரு கார்டு வைல்ட் ஜோக்கராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த மதிப்பில் உள்ள அனைத்து கார்டுகளும் அந்த விளையாட்டின் வைல்ட் ஜோக்கர்களாக மாறும்

உதாரணமாக, ஸ்பேட் 4 குறிப்பில்லாமல் எடுக்கப்பட்டு, வைல்ட் ஜோக்கராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், மற்ற அனைத்து குறியீடுகளிலும் (ஹார்ட்ஸ், டயமண்ட்ஸ், கிளப்ஸ்) 4 குறிப்பிட்ட இந்தியன் ரம்மி ஆன்லைன் கேம்/டீலுக்கான வைல்ட் ஜோக்கர்களாக மாறும்.

இந்தியன் ரம்மி கேமில் ஜோக்கர்களை எப்படி பயன்படுத்துவது

மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஒரு வரிசையில் அல்லது செட்டில் இல்லாமல் போன கார்டுகளுக்கு மாற்றாக ஜோக்கர்கள் பயன்படுத்தப்படுகின்றன. செல்லுபடியாகும் வெற்றி அறிவிப்புக்கு கட்டாயமான ஒரு உண்மையான வரிசையை உருவாக்கிய பிறகு, மீதமுள்ள வரிசைகள்/தொகுப்புகளில் ஏதேனும் விடுபட்ட கார்டுகளை மாற்ற ஜோக்கர்களைப் பயன்படுத்தலாம்.

1. உண்மையற்ற வரிசைகள்

  • How to use wild joker in impure sequence 1

    இங்கே 8 ஒரு வைல்ட் ஜோக்கர் மற்றும் இது 6 க்கு பதிலாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

  • How to use wild joker in impure sequence 1

    இங்கே 7 ஒரு வைல்ட் ஜோக்கர் மற்றும் இது K க்குப் பதிலாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

  •  How to use wild joker in impure sequence 2

    இங்கு 4 க்குப் பதிலாக அச்சிடப்பட்ட ஜோக்கர் பயன்படுத்தப்பட்டுள்ளது..

2. Sets

  • Wild Joker as replacement

    இங்கே 4 ஒரு வைல்ட் ஜோக்கர் மற்றும் இது 9 அல்லது 9 க்கு மாற்றாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

  • Printed Joker as replacement 1

    இங்கு 2 அல்லது 2 ஐ மாற்றாக அச்சிடப்பட்ட ஜோக்கர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

  • Printed Joker as replacement 2

    இங்கு 4 க்கு மாற்றாக அச்சிடப்பட்ட ஜோக்கர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

3. உண்மையான வரிசைகள்

வைல்ட் ஜோக்கர்களை தூய வரிசைகளிலும் பயன்படுத்தலாம், ஆனால் ஒரு உண்மையான வரிசையில், வைல்ட் ஜோக்கர் அதன் அசல் மதிப்பிலும், அதன் அசல் குறியீட்டின் கார்டாகவும் பயன்படுத்தப்படுகிறது, வேறு எந்த கார்டுக்கும் மாற்றாக அல்ல. உண்மையான வரிசைகளை உருவாக்க அச்சிடப்பட்ட ஜோக்கர்களைப் பயன்படுத்த முடியாது.

உதாரணமாக, Wild Joker as replacement 1 ஒரு வைல்ட் ஜோக்கர் என்றால்

  • Wild Joker in Pure Sequence

    6-7-8 என்பது ஒரு உண்மையான வரிசையாகும், ஏனெனில் 7 அதன் அசல் மதிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது, வேறு எந்த கார்டுக்கும் மாற்றாக இல்லை.

இந்தியன் ரம்மி ஆன்லைனை விளையாடுவது எப்படி

இந்தியன் ரம்மியை ஒரு சீட்டுக்கட்டிற்கு 1 ஜோக்கர் என, ஒன்று அல்லது இரண்டு வரையறுக்கப்பட்ட சீட்டுக்கட்டுகளைப் பயன்படுத்தி இரண்டு முதல் ஆறு ஆட்டக்காரர்கள் விளையாடுகிறார்கள். மேஜையில் உள்ள ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் 13 கார்டுகள், ஒவ்வொன்றாக வழங்கப்படுகின்றன. மீதமுள்ள கார்டுகள் மறைக்கப்பட்ட கட்டாக இருக்கிறது, மேசையில் கவிழ்த்து மறைக்கப்பட்டு வைக்கப்படுகின்றன.

மறைக்கப்பட்ட கட்டின் மேல் உள்ள கார்டு தெரியும்படியாக மேசையின் மேல் வைக்கப்பட்டு திறந்த கட்டை உருவாக்குகிறது. குறிப்பில்லாமல் எடுக்கப்பட்ட கார்டு வைல்ட் ஜோக்கராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த மதிப்பில் உள்ள அனைத்து கார்டுகளும் அந்த டீல்/கேமுக்கான வைல்ட் ஜோக்கர்களாக மாறும்.

ஒரு ஆட்டக்காரர் மறைக்கப்பட்ட சீட்டுக்கட்டு அல்லது திறந்த சீட்டுக்கட்டிலிருந்து ஒரு கார்டை எடுத்து விளையாட்டைத் தொடங்குகிறார். அதே வரிசைமுறையில், ஆட்டக்காரர் ஒரு கார்டை திறந்த கட்டில் இட்டு நிராகரிக்க வேண்டும். நிராகரிக்கப்பட்ட கார்டை அடுத்த ஆட்டக்காரர் எடுக்கலாம் அல்லது மறைக்கப்பட்ட சீட்டுக்கட்டிலிருந்து கார்டை எடுக்கலாம்.

ஜங்க்லீ ரம்மியில், தேவையான வரிசைகள் அல்லது வரிசைகள் மற்றும் செட்டுகளை நீங்கள் உருவாக்கியவுடன், 14வது கார்டை "ஃபினிஷ் ஸ்லாட்டில்" வைத்து நிராகரிக்க வேண்டும், பின்னர் உங்கள் எதிர் ஆட்டக்காரர்கள் பார்க்கும் வகையில் உங்கள் கை/கார்டுகளை காண்பித்து உடனடியாக வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்.

செல்லுபடியாகும் வெற்றி அறிவிப்புக்கு, குறைந்தபட்சம் இரண்டு வரிசைகள் இருக்க வேண்டும், அவற்றில் குறைந்தபட்சம் ஒரு உண்மையான வரிசை இருக்க வேண்டும். மேலும் உங்கள் எல்லா கார்டுகளும் வரிசைகள் அல்லது வரிசைகள் மற்றும் தொகுப்புகளில் அமைக்கப்பட வேண்டும்.

செல்லுபடியாகும் வெற்றி அறிவிப்புக்கு உதாரணம் இங்கே.

  • மெல்ட்
  • கார்ட்
  • விளக்கம்
  • உண்மையான வரிசை
  • உண்மையான வரிசை

     Pure Sequence: Valid Declaration
  • இந்த வரிசையானது ஒரே குறியீட்டில் குறைந்தபட்சம் 3 தொடர்ச்சியான கார்டுகளின் தேவையைப் பூர்த்தி செய்கிறது. எந்த கார்டும் ஜோக்கரால் மாற்றப்படவில்லை.
  • உண்மையற்ற வரிசை
  • உண்மையற்ற வரிசை

     Impure Sequence: Valid Declaration
  • 6 ஒரு வைல்ட் ஜோக்கர் மற்றும் இது K க்கு பதிலாக பயன்படுத்தப்பட்டுள்ளது..
  • தொகுப்பு1
  • தொகுப்பு1

    Four Card Valid Declaration
  • இந்த தொகுப்பில் வெவ்வேறு குறியீடுகளின் நான்கு கார்டுகள் உள்ளன.
  • தொகுப்பு2
  • தொகுப்பு2

    Printed Joker Valid Declaration
  • இந்த தொகுப்பு வெவ்வேறு குறியீடுகளில் இருந்து நான்கு 8கள் கொண்டுள்ளது, இதனால் இந்தியன் ரம்மி கேமில் செல்லுபடியாகும் தொகுப்பின் நிபந்தனையை திருப்திப்படுத்துகிறது.

இந்தியன் ரம்மி கேம்களை வெல்வது எப்படி

ரம்மி என்பது ஒரு திறமையான விளையாட்டு, நீங்கள் ஆட்டத்திற்கு புதியவராக இருந்தால், இந்தியன் ரம்மி ஆன்லைனில் விளையாடி, பயிற்சி செய்து, அதில் வெற்றி பெற வேண்டும். நீங்கள் இப்போதுதான் ஆன்லைன் ரம்மியைத் தொடங்குகிறீர்கள் என்றால், விளையாட்டைப் பற்றிய நல்ல புரிதலைப் பெற ரம்மி விதிகள் அனைத்தையும் கற்றுக் கொண்டு, உங்களால் முடிந்தவரை பயிற்சி கேம்களை விளையாடுங்கள்.

நீங்கள் அடிப்படை விஷயங்களை நன்கு அறிந்திருந்தால், உங்கள் விளையாட்டில் முன்னேறிச் செல்ல பின்வரும் உதவிக்குறிப்புகள் மற்றும் யுக்திகளைப் பயன்படுத்தலாம்:

உண்மையான வரிசையை உருவாக்குவதற்கு முன்னுரிமை கொடுக்கவும்: கார்டுகள் கொடுக்கப்படும்போது, முதலில் ஒரு உண்மையான வரிசையை உருவாக்குவதில் கவனம் செலுத்தவும். இந்தியன் ரம்மி விதிகளின்படி, ஒரு உண்மையான வரிசை என்பது ஒரே குறியீட்டில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொடர்ச்சியான கார்டுகளைக் கொண்டது. உண்மையான வரிசை இல்லாமல் வெற்றி பெறுவது சாத்தியமில்லை.

உங்கள் எதிர் ஆட்டக்காரர்களின் நகர்வுகளைக் கவனிக்கவும்: ரம்மி ஆன்லைனில், விளையாடும் போது, உங்கள் எதிர் ஆட்டக்காரர்களின் நகர்வுகளைக் கண்காணிப்பது முக்கியம். மேஜையில் உள்ள எந்தவொரு எதிர் ஆட்டக்காரரும் நீங்கள் நிராகரித்த கார்டைத் தேர்ந்தெடுத்தால், அடுத்துவரும் வரிசைமுறைகளில் அதனுடன் இணையக்கூடிய எந்த ஒரு கார்டையோ அல்லது அதே மதிப்புள்ள கார்டுகளையோ நிராகரிக்க வேண்டாம், ஏனெனில் இது உங்கள் எதிர் ஆட்டக்காரருக்குத் தேவையான சேர்க்கைகளை உங்களுக்கு முன் வெற்றி பெற உதவும்.

அதிக மதிப்புள்ள கார்டுகளை ஆரம்பத்திலேயே நிராகரிக்கவும்: இந்தியன் ரம்மியில், உங்கள் புள்ளிகளை பூஜ்ஜியமாகக் குறைப்பதே உங்கள் குறிக்கோள் ஆகும். கிங், குவீன், ஜேக் மற்றும் ஏஸ் போன்ற உயர் மதிப்பு கார்டுகள் சேர்க்கையில் பொருந்தாமல் இருந்து, உங்கள் எதிர் ஆட்டக்காரர்களில் ஒருவர் உங்களுக்கு முன் வெற்றியை அறிவித்தார் என்றால், உங்கள் அபராதப் புள்ளிகள் அதிகரிக்கும். எனவே அவற்றை வரிசை அல்லது தொகுப்புகளில் எளிதாகப் பயன்படுத்த முடியாவிட்டால் ஆரம்பத்திலேயே அவற்றை நிராகரிக்கவும்.

உங்கள் எதிரிகளை ஏமாற்றவும்: மோசமான கார்டுகள் இருந்தால், உங்கள் எதிர் ஆட்டக்காரர்களை விஞ்சுவதற்கான ஒரு சிறந்த உத்தி ஆகும். உங்களிடம் மோசமான கார்டுகள் இருக்கும்போது, சில குறைந்த மதிப்புள்ள கார்டுகளை நிராகரிக்கலாம் மற்றும் திறந்த கட்டிலிருந்து கார்டுகளை எடுக்கலாம். இது உங்களுக்கு ஒரு சிறந்த கார்டுகள் இருப்பதாகவும், நீங்கள் விரைவில் வெற்றியை அறிவிக்கப் போகிறீர்கள் என்றும் உங்கள் எதிர் ஆட்டக்க்காரர்களை நினைக்க வைக்கும், மேலும் பெரிய வித்தியாசத்தில் தோல்வியைத் தவிர்ப்பதற்காக அவர்கள் விளையாட்டிலிருந்து வெளியேறக்கூடும்.

இந்தியன் ரம்மி கேமில் புள்ளிகள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன

இந்தியன் ரம்மி ஆன்லைனில், இந்த கேமில் புள்ளிகள் எதிர்மறையான மதிப்பைக் கொண்டிருப்பதால், ஆட்டத்தில் வெற்றிபெற வீரர்கள் தங்கள் ஸ்கோரை பூஜ்ஜியமாகக் குறைக்க வேண்டும். நீங்கள் செல்லுபடியாகும் வெற்றி அறிவிப்பைச் செய்தால், நீங்கள் பூஜ்ஜிய புள்ளிகளைப் பெற்று விளையாட்டை வெல்வீர்கள். தோல்வியுற்ற ஆட்டக்காரர்களுக்கான புள்ளிகள் அவர்களின் கைகளில் உள்ள சேர்க்கையில் இல்லாத கார்டுகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

பாயிண்ட்ஸ் ரம்மி கேமில் தவறான வெற்றி அறிவிப்பைச் செய்தார் என்றால், ஆட்டக்காரர் அபராதமாக 80 புள்ளிகளைப் பெறுவார். பாயிண்ட்ஸ் ரம்மி கேமில் ஒரு ஆட்டக்காரர் பெறக்கூடிய அதிகபட்ச புள்ளிகள் இதுவாகும்.

மோசமான கார்டுகளைப் பெறும்போது, "டிராப்" பட்டனைப் பயன்படுத்தி கேமை/சுற்றிலிருந்து வெளியேறுவதைத் தேர்வுசெய்யலாம். நீங்கள் எந்த கார்டையும் எடுக்காமல் விளையாட்டின் தொடக்கத்தில் வெளியேறினால், பாயிண்ட்ஸ் ரம்மி கேமில் 20 அபராதப் புள்ளிகளை தண்டனையாகப் பெறுவீர்கள். ஆட்டத்தின் நடுவில் வெளியேறினால், 40 புள்ளிகள் அபராதமாகப் பெறுவீர்கள்.

இந்தியன் ரம்மியில், அதிக மதிப்பிலிருந்து குறைவான மதிப்பு வரை வரிசைப்படுத்தப்பட்ட கார்டுகள் பின்வருமாறு: A, K, Q, J, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2. ஏஸ் (A) 2 மற்றும் 3 உடனும் வரிசையை உருவாக்கலாம். முக கார்டுகள் மற்றும் ஏஸ்கள் ஒவ்வொன்றும் 10 புள்ளிகள் மதிப்புடையது, அதேசமயம் எண்ணிடப்பட்ட கார்டுகள் அவற்றின் முக மதிப்புகளின் மதிப்பைக் கொண்டது.

பின்வரும் உதாரணத்தைக் கருத்தில் கொள்வோம்:

இரண்டு ஆட்டக்காரர்கள் ஒரு பாயிண்ட்ஸ் ரம்மி கேமை விளையாடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆட்டக்காரர் 1 செல்லுபடியாகும் வெற்றி அறிவிப்பை வெளியிட்டு வெற்றி பெறுகிறார். ஆட்டக்காரர் 2 க்கான புள்ளிகளின் கணக்கீடு கீழே காட்டப்பட்டுள்ளது.

Rummy combination except a pure sequence

நிலை: ஆட்டக்காரர் 1 ஒரு உண்மையான வரிசையை உருவாக்கியுள்ளார் (9-10-J) ஒரு உண்மையற்ற வரிசை (3♣-5♣-PJ) மற்றும் 2 தொகுப்புகள் (K-K♠-2 (WJ) மற்றும் A♠-A-A♣-A). ஆட்டக்காரர் 1 செல்லுபடியாகும் வெற்றி அறிவிப்பைச் செய்தார், எனவே பூஜ்ஜிய புள்ளிகளைப் பெறுகிறார்.

Missing Turn in rummy

நிலை: ஆட்டக்காரர் 2 இரண்டு உண்மையான வரிசையை உருவாக்கியுள்ளார் (6-7-8 மற்றும் 3♠-4♠-5♠) மற்றும் ஒரு தொகுப்பு (Q♣-Q-2 (WJ)). இருப்பினும், ஆட்டக்காரரிடம் நான்கு கார்டுகள் (K♣, J, 6 மற்றும் 9♠) உள்ளன, அவை எந்த வரிசையிலும் அல்லது தொகுப்பிலும் இல்லை. எனவே, இந்த குழுவில் சேர்க்கப்படாத கார்டுகளின் கூட்டுத்தொகைக்கு சமமான அபராத மதிப்பெண்ணை ஆட்டக்காரர் பெறுவார்: 10 (K♣) + 10 (J) + 6 (6) + 9 (9♠) = 35 புள்ளிகள்.

ஜங்க்லீ ரம்மியில் இந்தியன் ரம்மி ஆன்லைன் டோர்னமெண்ட்டுகள்

நீங்கள் ஆன்லைனில் ரம்மி விளையாட விரும்புகிறீர்களா, ஆனால் உங்களிடம் நேரம் குறைவாக உள்ளதா? இந்தியன் ரம்மி கேம்களுக்கான நம்பகமான ஆன்லைன் தளமான ஜங்க்லீ ரம்மியில் சேரவும். நாங்கள் ரம்மியை ஆன்லைனில் இலவசம் மற்றும் கேஷ் விளையாட்டுகள் மற்றும் போட்டிகள் போன்ற பல வடிவங்களில் வழங்குகிறோம், இவை மூன்று வெவ்வேறு வகைகளில் விளையாடப்படலாம்: பாயிண்ட்ஸ் ரம்மி, டீல்ஸ் ரம்மி மற்றும் பூல் ரம்மி.

நாங்கள் இணையதளத்தில் மிகப்பெரிய ரம்மி டோர்னமெண்ட்டுகளை நடத்துகிறோம், இதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படுகின்றன! நீங்கள் எங்களின் தற்போதைய நடப்பு டோர்னமெண்ட்டுகளில் கலந்துகொண்டு, வியக்கத்தக்க பணப் பரிசுகள் மற்றும் பிற வெகுமதிகளை வெல்ல உங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம்.

நீங்கள் விளையாட்டிற்குப் புதியவராக இருந்தால், இந்தியன் ரம்மி விதிகளைப் புரிந்து கொள்ளவும், உங்கள் திறமைகளை மேம்படுத்தவும், நம்பிக்கையைப் பெறவும் எங்கள் இலவச பிராக்டீஸ் கேம்களை விளையாட மறக்காதீர்கள். தளம் மற்றும் விளையாட்டைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டபின், நீங்கள் செய்ய வேண்டியது மிகச் சிறிய நுழைவுக் கட்டணத்தைச் செலுத்தி, பெரிய ரொக்கப் பரிசுக்காக விளையாடத் தொடங்குங்கள்!

ஜங்க்லீ ரம்மி செயலியை இப்போதே பதிவிறக்கம் செய்து இந்தியாவின் மிகவும் சுறுசுறுப்பான ஆன்லைன் ரம்மி சமூகத்தின் ஒரு உறுப்பினராகுங்கள்.

இந்தியன் ரம்மி ஆன்லைன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இந்தியன் ரம்மியின் வெவ்வேறு வேரியண்ட்டுகள் உள்ளனவா?

இந்தியன் ரம்மியானது ரம்மி விளையாட்டின் கிளாஸிக் பதிப்பால் ஈர்க்கப்பட்டது. இது 13 கார்டுகளைப் பயன்படுத்தி விளையாடப்படுகிறது, இது சரியான வெற்றி அறிவிப்பைச் செய்ய, ஆட்டக்காரர்கள் தேவையான வெவ்வேறு சேர்க்கைகளில் வரிசைப்படுத்த வேண்டும். இந்த விளையாட்டை மூன்று வெவ்வேறு வேரியண்ட்டுகளில் விளையாடலாம், அவையாவன: பாயிண்ட்ஸ், பூல் மற்றும் டீல்ஸ்.

பாயிண்ட்ஸ் ரம்மியில், கேஷ் கேம்களில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ரூபாய் மதிப்பைக் கொண்ட புள்ளிகளுக்காக விளையாட்டு விளையாடப்படுகிறது. பூல் ரம்மி ஒரு நிலையான நுழைவுக் கட்டணத்தில் விளையாடப்படுகிறது, இது பரிசுக் குவியலுக்குச் செல்கிறது. டீல்ஸ் ரம்மி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சுற்றுகளில் விளையாடப்படுகிறது மற்றும் ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் விளையாட்டின் தொடக்கத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சிப்கள் ஒதுக்கப்படும்.

இந்தியன் ரம்மி ஒன்று அல்லது இரண்டு வரையறுக்கப்பட்ட சீட்டுக்கட்டுகளைப் பயன்படுத்தி விளையாடப்படுகிறது, மேலும் ஒரு கட்டிற்கு 1 அச்சிடப்பட்ட ஜோக்கரைக் கொண்டது. விளையாட்டின் தொடக்கத்தில் ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் 13 கார்டுகள் வழங்கப்படுகின்றன, இதைப் பயன்படுத்தி வீரர்கள் வெவ்வேறு தேவையான சேர்க்கைகளை உருவாக்க வேண்டும்.

இந்தியன் ரம்மியை ஒரு மேஜையில் இரண்டு முதல் ஆறு ஆட்டக்காரர்கள் விளையாடலாம். பயன்படுத்தப்படும் சீட்டுக்கட்டுகளின் எண்ணிக்கை ஒரு விளையாட்டில் உள்ள ஆட்டக்காரர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது. ஒரு விளையாட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட ஆட்டக்காரர்கள் பங்கேற்றால், இரண்டு சீட்டுக்கட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியன் ரம்மி கேமில் ஜோக்கர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்த கார்டுகள் ஒரு வரிசையில் அல்லது ஒரு தொகுப்பில் ஏதேனும் விடுபட்ட கார்டுகளுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஜோக்கர்களில் இரண்டு வகைகள் உள்ளன: வைல்ட் ஜோக்கர்கள் மற்றும் அச்சிடப்பட்ட ஜோக்கர்கள். விளையாட்டின் தொடக்கத்தில் குறிப்பிடப்படாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டு ஒரு வைல்ட் ஜோக்கராக மாறும். அதே மதிப்புள்ள மற்ற எல்லா கார்டுகளும் அந்த டீல்/விளையாட்டுக்கான வைல்ட் ஜோக்கர்களாக மாறும்.

உதாரணமாக, ஹார்ட் 3 தற்செயலாக ஒரு வைல்ட் ஜோக்கராக தேர்ந்தெடுக்கப்பட்டால், வெவ்வேறு குறியீடுகளில் உள்ள அனைத்து 3களும் அந்த கேமில் வைல்ட் ஜோக்கர்களாக மாறிவிடும். மாற்றாக, சீட்டுக்கட்டில் அச்சிடப்பட்ட ஜோக்கர் உள்ளது.

இந்தியன் ரம்மி விளையாட்டில், செல்லுபடியாகும் வெற்றி அறிவிப்புக்கு, குறைந்தபட்சம் இரண்டு வரிசைகள் இருக்க வேண்டும், அவற்றில் குறைந்தபட்சம் ஒரு உண்மையான வரிசை இருக்க வேண்டும். மீதமுள்ள சேர்க்கைகள் வரிசைகள் அல்லது தொகுப்புகளாக இருக்கலாம்.

ஒரு வரிசை என்பது ஒரே குறியீட்டில் உள்ள மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொடர்ச்சியான கார்டுளின் சேர்க்கையாகும். ஒரு தொகுப்பு என்பது ஒரே மதிப்பில் உள்ள மூன்று அல்லது நான்கு கார்டுகளின் சேர்க்கையாகும், ஆனால் வெவ்வேறு குறியீடுகள் கொண்டவை ஆகும்.

குறைந்தபட்சம் 1 உண்மையான வரிசை கொண்ட குறைந்தது 2 வரிசைகளை உருவாக்கி, மற்ற எல்லா கார்டுகளையும் வரிசை அல்லது தொகுப்புகளில் வரிசைப்படுத்தியவுடன், உங்கள் கார்டுகளில் ஒன்றை ஃபினிஷ் ஸ்லாட்டில் நிராகரிக்க வேண்டும், பின்னர் உங்கள் கை/கார்டுகளை வெற்றி அறிக்கையாக வெளியிடவும், இதனால் உங்கள் எதிர் ஆட்டக்காரர்கள் உங்கள் கார்டுகளைப் பார்க்க முடியும்.

தொடர்புகொள்வதற்கு

எங்களுக்கு ஏதாவது கருத்தை தெரிவிக்க விரும்புகிறீர்களா? “Help” பிரிவில் இருக்கும் “Contact us” என்ற அம்சத்தை பயன்படுத்தி எங்களை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். 24 மணி நேரத்திற்குள் எங்கள் வாடிக்கையாளர்கள் உதவி பிரதிநிதி உங்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண முயற்சிப்பார்.

OR

Win cash worth 8,850* as Welcome Bonus

Scroll to top